அருப்புக்கோட்டை: 10வது வார்டில் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10வது வார்டைச் சேர்ந்த முஸ்லீம் நடுத்தெருவில் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியாமாக மாறிவிட்டது. எனவே அச்சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை, ஆக.3: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 10வது வார்டைச் சேர்ந்த முஸ்லீம் நடுத்தெருவில் தார்ச்சாலை பெயர்ந்து குண்டும் குழியாமாக மாறிவிட்டது. எனவே அச்சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை எழுந்துள்ளது.
அருப்புக்கோட்டை 10வது வார்டுக்குள்பட்ட முஸ்லீம் நடுத்தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட தார்ச்சாலை தற்போது கற்கள் பெயர்ந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறிவிட்டது.
அச்சாலையின் சில இடங்களில் கூர்மையான கற்கள் வெளித்தெரிவதால் இதில் செல்லும் சைக்கிள்கள் கூர்மையான கற்களால் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. மேலும் இச்சாலையில் அதிக வாகனப் போக்குவரத்து உள்ளநிலையில் பள்ளமான இடங்களில் தேங்கும் மழைநீர், வாகனங்கள் செல்லும் போது வீதி முழுக்கச் சேற்றினை இறைத்துச் செல்கின்றன என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இச்சாலையைச் சீரமைக்க குடியிருப்பு வாசிகள் பலமுறை புகார் செய்தும் பல ஆண்டுகளாகியும் பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்டுகிறது.
எனவே விரைவில் உரிய நடவடிக்கை மூலம் தார்ச்சாலையைச் சீரமைக்க மீண்டும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.