இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் சக வீரரால் சுட்டுக்கொலை
மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் பிரிவின் வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தனர
மேற்கு வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இரண்டு எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் தங்கள் பிரிவின் வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று காவல்துறை தெரிவித்தனர்.
ராய்கஞ்ச் காவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுமித் குமார் கூறுகையில்,
இந்தியா-வங்காள எல்லையில் ராய்கஞ்ச் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பாத்துன் கிராமத்தில் 146 வது படையைச் சார்ந்த எல்லைப் பாதுகாப்பு படை காவலர் உத்தம் சூத்ரதர், தனது படையின் ஆய்வாளர் மஹிந்தர் சிங் பட்டி மற்றும் சக காவலர் அனுஜ் குமார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இதில் சம்பவ இடத்திலேயே ஆய்வாளர் மஹிந்தர் சிங் பட்டி மற்றும் காவலர் அனுஜ் குமார் உயிரிழந்தனர்.
இச்சம்பவத்திற்கு பின், காவலர் உத்தம் சூத்ரதர் தனது தளபதி முன் சரணடைந்தார். இப்போது ராய்கஞ்ச் காவல் நிலையத்தில் அவர் ஒப்படைக்கப்பட்டார் என கூறினார்.