பேளூரில் நடைபெற்ற தாய்ப்பால் வாரவிழா 
தற்போதைய செய்திகள்

பேளூர் சுகாதார நிலையத்தில் தாய்ப்பால் வார விழா

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் வட்டார அரசு சுகாதார நிலையத்தில், தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பேளூர் வட்டார அரசு சுகாதார நிலையத்தில், தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழா நடைபெற்றது.

வாழப்பாடி அருகே பேளூர் வட்டார அரசு சுகாதார நிலையம், வாழப்பாடி அரிமா சங்கம் மற்றும் அன்னை அரிமா சங்கம் இணைந்து  நடத்திய தாய்ப்பால் விழிப்புணர்வு வார விழாவிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வாழப்பாடி அரிமா சங்கத்தலைவர் ஜவஹர் வரவேற்றார். அன்னை அரிமா சங்கத் தலைவி புஷ்பா, செயலாளர் சுதாபிரபு, பொருளர்கள் தேன்மொழி, பன்னீர்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பேளூரில் நடைபெற்ற தாய்ப்பால் வாரவிழா

பேளூர் அரசு மருத்துவர் திவ்யா, வாழப்பாடி அரசு சித்த மருத்துவர் செந்தில்குமார், அரிமா சங்க நிர்வாக செயலர் பெரியார்மன்னன், ஆசிரியர் சிவ.எம்கோ, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி மற்றும் மருத்துவ பணியாளர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு, தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் குழந்தைகளுக்கு தாயப்பால் புகட்டும் முறைகள் குறித்த விளக்கக் கையேடு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  

அரிமா சங்கங்களின் சார்பில், கருவுற்றப் பெண்களுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் கொண்டைக்கடலை சுண்டல், கடலை உருண்டை தயாரித்து வழங்கப்பட்டது. அங்கன்வாடி பணியாளர்கள் சார்பில், காய்கறிகள், பழங்கள், ஊட்டச்சத்து மாவில் தயாரிக்கப்பட்ட பதார்த்தங்கள் அடங்கிய சரிவிகித உணவு கண்காட்சி நடைபெற்றது. சமூக இடைவெளியை கடைபிடித்து, கர்ப்பிணிப்பெண்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் சண்முகம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெக சிறப்பு பொதுக்குழு தொடங்கியது! கரூரில் பலியானோருக்கு மெளன அஞ்சலி!

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு

வெற்றி உரையில் நேருவின் பேச்சை மேற்கோள்காட்டிய நியூ யார்க் மேயர் ஸோரான் மம்தானி!

பிலாஸ்பூரில் சரக்கு ரயில்- பயணிகள் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு, 20 பேர் காயம்

பெண் தொழிலாளிகளின் குளியலறையில் ரகசிய கேமரா! வடமாநில இளம்பெண் கைது!

SCROLL FOR NEXT