முகநூலில் நேரலை ஒளிபரப்பு செய்தபடி இளைஞர் தற்கொலை
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் அருகே உணவகத்தில் வேலை செய்யும் இளைஞர் முகநூலில் நேரலை ஒளிபரப்பியபடி தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிர மாநிலம் பால்கர் அருகே உணவகத்தில் வேலை செய்யும் இளைஞர் முகநூலில் நேரலை ஒளிபரப்பியபடி தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பால்கர் மாவட்டம், ஜவகர் நகரப் பகுதியில் இருக்கும் உணவகத்தில் வேலை செய்பவர் நவ்நாத் சேஞ்ச் (வயது 22). இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புதான் இங்கு வேலைக்கு சேர்ந்தார்.
Advertisement
இவர் உரிமையாளரின் குடியிருப்பில் சக தொழிலாளர்களுடம் தங்கி இருந்தார். நேற்று இடைவெளியின் போது, தனியாக அறைக்குச் சென்ற இவர் முகநூலில் நேரலை ஒளிபரப்பியபடி தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணங்கள் இன்னும் தெரியவில்லை. மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றோம் என கூறினார்.