அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு 
தற்போதைய செய்திகள்

விசாகப்பட்டினம் : அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் ஆய்வு

விசாகப்பட்டினத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

ANI

விசாகப்பட்டினத்தில் உள்ள அமோனியம் நைட்ரேட் சேமிப்புக் கிடங்கில் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு செய்தது.

விசாகப்பட்டினம் மிண்டி பகுதியில் உள்ள சர்வன் சேமிப்புக் கிடங்கில் 18,500 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட்டை சேமித்து வைத்துள்ளனர். இதன் பாதுகாப்பு தன்மைக் குறித்து ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் உத்தரவிட்டிருந்தார்.

அந்தக் குழுவில் வருவாய்த்துறை அதிகாரி கே.பெஞ்சலா கிஷோர், மாசு கட்டுப்பாட்டுத்துறை நிர்வாக பொறியாளர் சுபான் மற்றும் தொழிற்சாலைகளின் ஆய்வாளர் சிவா சங்கர் ரெட்டி ஆகியோரை நியமித்தார்.

இந்தக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு நடத்தினார்கள். ஆய்வுக்கு பின் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்பித்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட அறிக்கையில்,

விசாகப்பட்டினம் மிண்டி பகுதியில் உள்ள அமோனியம் நைட்ரேட்டை சேமிப்புக் கிடங்கை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு சேமிக்கப்பட்டுள்ள அமோனியம் நைட்ரேட் மிக பாதுகாப்பாக உள்ளது.

இருப்பினும், பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் ஆய்வுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து விபத்துகளை தடுக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம் என தெரிவித்தனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இயக்குநராகும் ஜித்து மாதவன் மனைவி!

நண்பர்களிடையே கருத்து வேறுபாடு இயல்பு! டிரம்ப் - மோடி குறித்து அமெரிக்க தூதர்!

இந்த அறிகுறிகள் எல்லாம் இருக்கிறதா? மன அழுத்தமாக இருக்கலாம்!

வா வாத்தியார் அவர்களுக்கான படம் கிடையாது... நலன் குமாரசாமி!

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT