முகப்பு
தற்போதைய செய்திகள்

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் : வெறிச்சோடியது திருப்பூர்

தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமையும் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:05 PM
திருப்பூரில் வெறிச்சோடி காணப்படும் பழைய பேருந்து நிலையம் மேம்பாலம்.
பகிர்:


திருப்பூர்: தளர்வுகளற்ற பொதுமுடக்கம் காரணமாக ஆகஸ்ட் மாதத்தின் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமையும் திருப்பூர் மாநகரம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் மாதத்தின் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமையும் திருப்பூர் மாநகரில் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் மாநகரின் முக்கிய சாலைகளான குமரன் சாலை, காமராஜர் சாலை, தாராபுரம் சாலை, மங்கலம் சாலை, புதிய பேருந்து நிலையம், புஷ்பா ரவுண்டானா, அவிநாசி சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை வாகனப் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. 

திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட், மளிகைக் கடைகள், பேக்கரிகள், உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் முற்றிலும் அடைக்கப்பட்டுள்ளது. எனினும், ஒரு சில இடங்களில் பொதுமுடக்கத்தை மீறி வெறியில் சுற்றும் வாகன ஓட்டிகளை காவல் துறையினர் எச்சரித்து அனுப்புகின்றனர். அதே வேளையில், முகக் கவசம் இல்லாமல் வாகனங்களில் வரும் நபர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →