தற்போதைய செய்திகள்

உரிய நேரத்தில் உதவி: பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் நன்றி

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் வெள்ள பாதிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினரை அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.


கேரளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் அணைகள் திறந்துவிடப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் கேரளத்தில் வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடிக்கு முதல்வர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, வெள்ள பாதிப்பு மீட்பு பணிகளை மேற்கொள்ள தகுந்த நேரத்தில் தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மத்திய அரசால் அனுப்பிவைக்கப்பட்டனர். இதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவிலும், கோழிக்கோடு விமான விபத்திலும் தீவிரமாக  செயல்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கேரளத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அளிக்கப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT