ரஷியாவின் தடுப்பூசி 2 ஆண்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்
ரஷியா கண்டுபிடித்துள்ள கரோனா தொற்றுக்கான தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:36 PM
மாஸ்கோ : ரஷியா கண்டுபிடித்துள்ள கரோனா தொற்றுக்கான தடுப்பூசி இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
காமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய தடுப்பூசிக்கு ரஷிய சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்தது.
இது குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பில், இரண்டு கட்டங்களாக போடப்படும் இந்த தடுப்பூசி மூலம் இரண்டு ஆண்டுகள் வரை நோய் எதிர்ப்பு சக்தி உருவாக உதவியாக இருக்கும்.
Advertisement
இந்த தடுப்பூசியை விலங்குகள் மீது சோதனை செய்யப்பட்டு, பின்னர் இரண்டு குழு தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.