ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ள பாதிப்பால் பாலம் சேதம்
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் சேதம் அடைந்தது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தற்காலிக பாலம் சேதம் அடைந்தது.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. தில்லி, உத்தரப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஹிமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவட்டத்தில் உள்ள ஸ்கிப்பா கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பாலம் சேதம் அடைந்தது. தொடர் மழையால் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் வெள்ளத்தால் பாலம் சேதம் அடைந்தது. பாலத்திற்கு அருகே உள்ள ஸ்கிப்பா கிராம சாலையும் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளது. இந்த நிகழ்வில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.