முகப்பு
தற்போதைய செய்திகள்

சீனக் கோடை வெள்ளம் : 200 பேர் காணவில்லை, 18 ஆயிரம் கோடி இழப்பு

சீனாவில் ஏற்பட்ட கோடைகால வெள்ளத்தில் 200 பேர் காணவில்லை மற்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக சீன அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
சீனா கோடை வெள்ளம்
பகிர்:

சீனாவில் ஏற்பட்ட கோடைகால வெள்ளத்தில் 200 பேர் காணவில்லை மற்றும் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் சேதமடைந்துள்ளதாக சீன அரசு தரப்பில் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவசரநிலை மற்றும் மேலாண்மை துறையின் இணை அமைச்சர் ஜாவ் சூவென் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோடை வெள்ளம் நாட்டின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ள அனைத்து ஆறுகளிலும் ஏற்பட்டுள்ளது. முக்கிய நகரங்கள் பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதில் 200-க்கும் மேற்பட்டோர் காணவில்லை எனவும், 54 ஆயிரம் வீடுகள் வெள்ளத்தில் அழிந்துள்ளதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.  

வெள்ளத்தால் 18 ஆயிரம் கோடி ரூபாய் பொருளாதார இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பானது கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ள சேதத்தைவிட 15.9 சதவீதம் அதிகமாகும்.

சீனா, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உள்ளது. ஆனால் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் உள்நாட்டின் சந்தை சரிவு ஆகியவற்றையால் வளர்ச்சி குறைந்துள்ளது. 

இது பெரும்பாலும் கரோனா பரவல் மற்றும் அமெரிக்காவுடன் ஏற்படும் தொடர்ச்சியான வர்த்தக பிரச்சனை ஆகியவற்றால் சரிவு ஏற்பட்டுள்ளது என கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →