தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் பண்ணையில் இருந்து தப்பித்த 5 சிங்கங்கள் : மக்கள் அச்சம்

DIN

பாகிஸ்தான் கராச்சியின் குல்ஷன்-இ-ஹதீத் அருகே ஆகஸ்ட் 11-ம் தேதி பண்ணையில் இருந்து தப்பித்த 5 சிங்கங்களால் மக்கள் அச்சமடைந்தனர்.

கராச்சியின் குல்ஷன்-இ-ஹதீத் பகுதியில் தனியார் பண்னையில் 6 சிங்கங்களை வளர்த்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை அதில் 5 சிங்கங்கள் பண்ணையில் இருந்து தப்பித்தது. 

அங்கிருந்து தப்பித்த சிங்கம் அப்பகுதியில் உள்ள வீதிகளில் சுற்றித்திரிந்தது. ஒரு நாயை கடித்து கொன்ற சிங்கங்கள் வீடுகளுக்கு வெளியே நடமாடிக் கொண்டு இருந்தது 

அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து பல மணிநேரத்திற்கு பிறகு மயக்க மருந்து அளித்து  சிங்கங்களை பிடித்தனர்.
 
இது குறித்து வனவிலங்கு பாதுகாவலர் ஜாவேத் அகமது மெஹர் கூறிகையில்,

சிங்கங்கள் தப்பித்த தகவல் அறிந்ததும் எங்கள் நிபுணர் குழுவுடன் வனத்துறை அதிகாரிகளின் உதவிக்காக சம்பவ இடத்திற்கு சென்றோம். பண்ணை வீட்டில் சிங்கங்களை அடைத்து வைப்பது சட்டவிரோதமானது. அப்பண்ணையின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT