காரைக்காலில் அமைச்சர் ஷாஜகான் கொடி ஏற்றினார் 
தற்போதைய செய்திகள்

காரைக்காலில் சுதந்திர தின விழா : அமைச்சர் ஷாஜகான் கொடி ஏற்றினார்

காரைக்கால் சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

DIN

காரைக்கால் : காரைக்கால் சுதந்திர தின விழாவையொட்டி புதுச்சேரி அமைச்சர் ஷாஜகான் தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.

காரைக்கால் கடற்கரை சாலையில் சுதந்திர தின விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால், வருவாய்த்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.ஃஎப்.ஷாஜகான் கொடி ஏற்றுவார் என அறிவிக்கப்பட்டது.

இதன்படி நிகழ்விடத்துக்கு வந்த அமைச்சர் ஷாஜகான் தேசியக்கொடி ஏற்றிவைத்து வைத்து சுதந்திர தின உரையாற்றினார். காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

நிகழ்வின்போது,  கடந்த ஆண்டு பொதுத் தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார். காவல்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கினார். கரோனா தடுப்புப் பணியில் சிறந்து பணியாற்றும் அரசுத்துறையினருக்கு அமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளை அமைச்சர் கௌரவித்தார். நிகழ்வில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.ஏ.யு.அசனா, மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் நிகாரிகா பட், துணை ஆட்சியர்கள் எம்.ஆதர்ஷ், எம்.பாஸ்கரன், மண்டல காவல் கண்காணிப்பாளர்கள் கே.எல்.வீரவல்லபன், ரகுநாயகம்  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு

நேபாளம்: ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் 17 பேர் பலி

நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா கொடியேற்றம்

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

SCROLL FOR NEXT