புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று காலை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 76 ஆவது பிறந்த நாளை விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
முதல்வர் வே.நாராயணசாமி தனது வீட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி அவர்களின் திருவுருவ படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
இதைத்தொடர்ந்து புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி திருவுருவ படத்துக்கு முதல்வர் நாராயணசாமி மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டு புதுச்சேரி- கோரிமேடு சாலை சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தியின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
மாணவர் காங்கிரஸ் சார்பில் ஜோதி ஓட்டத்தை முதல்வர்.நாராயணசாமி, தொடங்கி வைத்தார். புதுச்சேரி பிரதேச காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள 30 தொகுதிகளில் ராஜீவ்காந்தியின் திருவுருவப்படம் அலங்கரிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தி இனிப்பு கொடுத்து அன்னதானம் வழங்கி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிகளில் வருவாய்த்துறை அமைச்சர் ஷாஜகான், மக்களவை உறுப்பினர் வெ.வைத்திலிங்கம், புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.சுப்ரமணியன் மற்றும் பிரதேச காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.