முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பாடத்திட்டங்களை குறைக்க வாய்ப்பு -கல்வித்துறை அமைச்சர்

கரோனா தொற்றை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டிற்கான பள்ளி பாடத்திட்டங்களை ஒடிசா அரசு குறைக்க வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சமீர் ரம்ஜன் தாஸ் தெரிவித்தார்.

Updated On : 24 ஆகஸ்ட், 2020 at 5:55 PM
ஒடிசா கல்வித்துறை அமைச்சர் சமீர் ரம்ஜன் தாஸ்
பகிர்:

கரோனா தொற்றை கருத்தில் கொண்டு 2020-21 கல்வியாண்டிற்கான பள்ளி பாடத்திட்டங்களை ஒடிசா அரசு குறைக்க வாய்ப்பு உள்ளதாக கல்வித்துறை அமைச்சர் சமீர் ரம்ஜன் தாஸ் தெரிவித்தார்.

இதுகுறித்து ரம்ஜன் தாஸ் கூறுகையில், மாணவர்களுக்கான பாடத்திட்டங்களைக் குறைக்கும் முயற்சியில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். இதில், எவ்வளவு சதவீதம் குறைக்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பாடத்திட்டம் குறித்த தெளிவான முடிவுகள் சில நாள்களில் வெளியிட வாய்ப்புள்ளது.

இந்த மாத இறுதி வரை பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது ஒடிசாவில் கரோனா தொற்றி உச்சத்தை அடைந்துள்ளது. ஆகவே, செப்டம்பர் மாதமும் பள்ளிகள் மூட வாய்ப்புள்ளது.

Advertisement

தற்போது மத்திய அரசின் வழங்குகின்ற வழிகாட்டுதலை நடைமுறைபடுத்தி வருகின்றோம். பாடத்திட்டங்களை எவ்வளவு சதவீதம் குறைக்க முடியும் என்பது பள்ளிகள் திறக்கும் தேதியை வைத்து தான் தீர்மானிக்க முடியும் என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.