உ.பி. யில் பத்திரிகையாளர் சுட்டுக் கொலை
உத்தர பிரதேசத்தில் திங்கள்கிழமை இரவு ஹிந்தி செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில் திங்கள்கிழமை இரவு ஹிந்தி செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்த பத்திரிக்கையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரபிரதேச மாநிலம், பாலியா மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு ஹிந்தி செய்தி தொலைகாட்சியில் பணிபுரிந்த பத்திரிக்கையாளர் ரத்தன் சிங்(வயது 42) என்பவரை அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து காவல் உதவி கண்காணிப்பாளர் சஞ்சய் யாதவ் கூறுகையில், சுட்டுக் கொல்லப்பட்டவர் பத்திரிகையாளர் என உறுதி செய்துள்ளோம். சுட்டுக் கொன்றவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை. வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம் என கூறினார்.
கடந்த மாதம் தில்லி அருகே தனது இரு குழந்தைகளுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளரைக் கொன்றது குறிப்பிடத்தக்கது.