முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆப்கானிஸ்தான் வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக உயர்வு

வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
ஆப்கானிஸ்தான் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட வீடுகளின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி
பகிர்:

வடக்கு ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெள்ளத்தால் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனார்.

வடக்கு ஆப்கானிஸ்தான் பர்வான் மாகாண பகுதிகளில் செவாய்க்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பல வீடுகள் அடித்து செல்லப்பட்டது. மேலும், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்சரிவில் இடிந்து விழுந்துள்ளது. 

வெள்ளத்தால், இதுவரை குழந்தைகள் உள்பட 100-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். மேலும், பலர் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாகாண மருத்துவமனையின் தலைவர் அப்துல் காசிம் சாங்கின் தெரிவித்தார்.

மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபாயம் எழுந்துள்ளது.


 
இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அமைச்சர் குலாம் பஹாவுதீன் ஜிலானி கூறுகையில், உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளவர்களை மேல் சிகிச்சைக்காக தலைநகர் கபூலில் உள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவார்கள் என கூறினார். 

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி கூறுகையில், பர்வான் மற்றும் பிற மாகாண மக்களுக்கும் உடனடியாக உதவ உத்தரவிட்டுள்ளேன். வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உதவ ராணுவ மற்றும் விமான படை வீரர்கள் பாதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு விரைந்துள்ளதாக கூறினார். 

கோடை காலங்களில், பெரும்பாலும் வடக்கு மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவிலான மழைப் பெய்வதால் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகின்றது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.