முகப்பு
தற்போதைய செய்திகள்

ஒடிசாவில் பலத்த மழை : வெள்ள அபாயம்

ஒடிசாவின் பத்ரகில் பலத்த மழை பெய்து வருவதால் பைதாராணி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
ஒடிசாவில் பலத்த மழை
பகிர்:

ஒடிசாவின் பத்ரகில் பலத்த மழை பெய்து வருவதால் பைதாராணி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்து வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பைதராணி மற்றும் பிற ஆறுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. 

இதையடுத்து, பைதராணி ஆற்றொர கிராமமான சதுர்பூஜ்பூர், ஹஸ்னாபாத் மற்றும் பண்டரிபோகாரி கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு வருகின்றனர். இங்குள்ள பகுதிகளில் வெள்ள நீர்  இடுப்பளவு சூழ்ந்துள்ளதால் மக்கள் பிற பகுதிகளுக்கு செல்ல சிரமப்படுகின்றனர்.

மேலும் புவனேஸ்வர் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், இன்று பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கூறியுள்ளது.

கடந்த புதன்கிழமை, ஒடிசா தலைமைச் செயலாளர் ஆசித் திரிபாதி தலைமையில், 12 மாவட்டங்களைச் சேர்ந்த வருவாய்த்துறை, நீர்வளத் துறை அதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மழை மற்றும் வெள்ள சூழ்நிலைகளைக் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பாலசூர், மயூர்பஞ்ச், பத்ராக், ஜஜ்பூர், கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் ஒடிசா பேரிடர் மீட்புப் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களையும் மாநில அரசு அனுப்பியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →