உத்தரகண்டில் மருந்தாளுநருக்கு கரோனா: மருத்துவமனை மூடல்
உத்தரகண்டின் மருந்தாளுநருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பித்தோராகர் மாவட்ட மருத்துவமனை 2 நாள்கள் மூடப்பட்டது.
உத்தரகண்டின் மருந்தாளுநருக்கு கரோனா தொற்று உறுதியானதால் பித்தோராகர் மாவட்ட மருத்துவமனை 2 நாள்கள் மூடப்பட்டது.
இதுகுறித்து பித்தோராகர் தலைமை மருத்துவ அதிகாரி ஹரிஷ் பந்த் கூறுகையில்,
மருந்தாளுநருக்கு புதன்கிழமை மாலை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையை இரண்டு நாள்கள் மூடியுள்ளோம்.
இருப்பினும், அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் மருத்துவர்களை நோயாளிகள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம் என கூறினார்.