முகப்பு
தற்போதைய செய்திகள்

உகாண்டா நகரில் மின்னல் தாக்கி 10 குழந்தைகள் பலி

உகாண்டா நகரின் காங்கோ எல்லை அருகே மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை காவல்துறை தெரிவித்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:12 PM
உகாண்டா நகரில் மின்னல் தாக்கி 10 குழந்தைகள் பலி (கோப்புப்படம்)
பகிர்:

உகாண்டா நகரின் காங்கோ எல்லை அருகே மின்னல் தாக்கியதில் 10 குழந்தைகள் உயிரிழந்ததாக வெள்ளிக்கிழமை காவல்துறை தெரிவித்தனர்.

உகாண்டாவின் மேற்கு நைல் பிராந்தியத்தில் வியாழக்கிழமை மாலை ஒரு மைதானத்தில் குழந்தைகள் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென்று இடியுடன் கூடிய கன மழை பெய்ததால் குழந்தைகள் அருகே இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கியுள்ளனர். 

அப்போது அந்த வீட்டின் மீது மின்னல் தாக்கியதில் 9 முதல் 16 வயதுக்குள்பட்ட 10 குழந்தைகள் பலியாகினர்.

கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் மழைக் காலங்களில் மின்னல் தாக்குவது அதிகளவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.