சீனாவில் விடுதி இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி
சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஒரு விடுதி இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் பலியாகினர், ஒருவர் காயமடைந்துள்ளார்.
சீனாவின் வடக்கு ஷாங்க்சி மாகாணத்தில் ஒரு விடுதி இடிந்து விழுந்ததில் இதுவரை 5 பேர் பலியாகினர், ஒருவர் காயமடைந்துள்ளார்.
ஷாங்க்சி மாகாணத்தின் லின்ஃபென் நகரத்தில் அமைந்துள்ள இரண்டு மாடிக் கட்டடம் சனிக்கிழமை காலை 9:40 மணியளவில் இடிந்து விழுந்தது.
முதற்கட்ட தகவல்களின்படி, இடிபாடுகளின் சிக்கிய 37 பேரில் 33 பேரை மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இடிபாடுகளில் சிக்கிய மற்றவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், துணை ராணுவத்தினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.