சிரோமணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்மபூஷண் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தில்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சிரோமணி அகாலிதளத்தின் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுக்தேவ் சிங் திண்ட்சா வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு வழங்கிய பத்மபூஷண் விருதை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இதற்குமுன், விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்த சிரோமணி அகாலிதளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.