சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
கரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை புறநகர் ரயில் சேவை கடந்த மாதம் அத்தியாவசிய பணியாளர்களும், பெண்களும் பயணிக்க மீண்டும் தொடங்கியது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில்,
சென்னை புறநகர் ரயில் சேவையின் ரயில் எண்ணிக்கை டிசம்பர் 7ஆம் தேதி முதல் 244ல் இருந்து 320ஆக அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பெண்கள் தவிர மற்ற பெண்கள் காலை 7.00 - 9.30 மணி வரையும், மாலை 4.30 - 7.00 மணி வரையும் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.