தற்போதைய செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்தது

DIN

மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் திருக்கோணமலையைக் கடந்து புரெவி புயல் வியாழக்கிழமை மாலை பாம்பன் அருகே நெருங்கி வரும்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. 

புயல் வலுவிழந்தாலும் தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலோரப் பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. 

இந்நிலையில் மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து தாழ்வு மண்டலமாக உள்ளது.

இந்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT