முகப்பு
தற்போதைய செய்திகள்

கோவாவில் இந்திய கடற்படை வீரர் பலி

கோவாவில் இந்திய கடற்படை வீரர் மர்மமான முறையில் பலியாகியுள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை தெரிவித்தனர்.

Updated On : 8 டிசம்பர், 2020 at 5:21 PM
கோப்புப்படம்
பகிர்:

கோவாவில் இந்திய கடற்படை வீரர் மர்மமான முறையில் பலியாகியுள்ளதாக செவ்வாய்க்கிழமை காவல்துறை தெரிவித்தனர்.

கோவாவில் உள்ள ஐ.என்.எஸ். ஹன்சா தளத்தில் பணியாற்றி வந்தவர் ராஜேஷ் குமார் குஷ்வாஹா (வயது 33). இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் கோவா வாஸ்கோ பகுதியில் உள்ள கடற்படை குடியிருப்பில் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று காலை குடியிருப்பின் அருகே கட்டுமானப் பணி நடந்து வரும் கட்டடத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

Advertisement

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக இந்திய கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.