ரூ. 1.45 லட்சம் கோடி திருப்பி ஒப்படைப்பு: வருமான வரித்துறை
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 8 வரை வருமான வரி செலுத்திய 89.29 லட்சம் பேருக்கு ரூ. 1.45 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் டிசம்பர் 8 வரை வருமான வரி செலுத்திய 89.29 லட்சம் பேருக்கு ரூ. 1.45 லட்சம் கோடி திருப்பி அளித்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில்,
இந்தியா முழுவதும் ஏப்ரல் 1, 2020 முதல் டிசம்பர் 8 வரையிலான வருமான வரி செலுத்துவோருக்கான திருப்பி வழங்கல் தொகை ரூ. 1,45,619 கோடி தொகையை 59.68 லட்சம் கணக்குகளுக்கு மத்திய நேரடி வரி வாரியம் திருப்பி வழங்கியுள்ளது.
அதில், 87,29,626 தனிநபர் கணக்குகளுக்கு ரூ. 43,274 கோடியும் 1,99,554 கார்ப்ரேட் நிறுவன கணக்குகளுக்கு ரூ. 1,02,345 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.