முகப்பு
தற்போதைய செய்திகள்

‘உலகத்தோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு’: கமல்ஹாசன்

உலகத்தோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன்
பகிர்:

உலகத்தோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட சுட்டுரையில்,

“இன்னும் வளர்ச்சி அடையாத இந்திய மாநிலங்களோடு ஒப்பிட்டு மார் தட்டிக்கொள்வது ஈயத்தைப் பார்த்து பித்தளை இளித்த கதை. தரணியில் முதலிடம் பெறும் தகுதியுடையது தமிழ்நாடு. உலகோடு போட்டியிடுவதே எங்கள் இலக்கு.” எனத் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் என அறிவித்துள்ள நிலையில், சீரமைப்போம் தமிழகத்தை என்ற தலைப்பில் தென் தமிழகத்தில் கமல்ஹாசன் பரப்புரை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.