ராஜஸ்தானில் 9 குழந்தைகள் பலி: மருத்துவமனை கண்காணிப்பாளர் பதவி நீக்கம்
ராஜஸ்தான் மருத்துவமனையில் நவம்பர் 10ஆம் தேதி ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மருத்துவமனையில் நவம்பர் 10ஆம் தேதி ஒன்பது குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து மருத்துவமனை கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து மாநில அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே.லான் மருத்துவமனையில் டிசம்பர் 10 ஆம் தேதி (24 மணி நேரத்தில்) 9 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன.
குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, மாநில சுகாதார அமைச்சகத்தின் 4 அதிகரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில் விசாரணைக் குழு சமர்பித்த அறிக்கையில், 3 குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு வரும்போதே உயிரிழந்த நிலையில் இருந்ததாகவும், 3 குழந்தைகள் பிறவி நோயால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறக்கும் போதே இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் எஸ்.சி துலாராவை பதவி நீக்கம் செய்து மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் ஜே.கே. லோன் மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.