சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 966 பேர் சரணடைந்துள்ளதாகவும் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் கடந்த 3 ஆண்டுகளில் 216 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், 966 பேர் சரணடைந்துள்ளதாகவும் மாநில அரசு புதன்கிழமை தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் தனேந்திர சாஹு நக்சல்கள் கொல்லப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு மாநில உள்துறை அமைச்சர் தம்ரத்வாஜ் சாஹு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,
2018ஆம் ஆண்டு முதல் நிகழ்வாண்டு நவம்பர் 30ஆம் தேதி வரை 216 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 966 பேர் சரணடைந்துள்ளனர்.
இதில், அதிகபட்சமாக சுக்மா மாவட்டத்தில் 82 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர், 333 பேர் சரணடைந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து பிஜாப்பூர் (46), டான்டேவாடா (30), ராஜ்நந்த்கான் (17), நாராயன்பூர் (16), பஸ்தர் (7), தம்தாரி (7) ), கங்கர் (6), கபிர்தாம் (3) மற்றும் கரியாபந்த் மற்றும் கோண்ட்கான் மாவட்டங்களில் தலா ஒருவர் பலியாகியுள்ளனர்.
மேலும், டான்டேவாடாவில் (300), நாராயண்பூரில் (164), பிஜாப்பூரில் (77), கோண்டகானில் (46), பஸ்தாரில் (36), ராஜ்நந்த்கானில் (7) மற்றும் காங்கரில் (3) பேர் சரணடைந்துள்ளதாக தெரிவித்தார்.