முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆன்லைன் பதிவுக்கு எதிர்ப்பு: சிதம்பரத்தில் தீட்சிதர்கள் போராட்டம்

சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
போரட்டத்தில் ஈடுபட்டு வரும் தீட்சிதர்கள் மற்றும் பக்தர்கள்.
பகிர்:

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் தேர் திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் பதிவு கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதை எதிர்த்து தீட்சிதர்கள் தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மார்கழி மாத திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் நாளை தேரோட்டமும் நாளை மறுநாள் 30ஆம் தேதியன்று ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள வரும் பக்தர்கள் கட்டாயம் இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீட்சிதர்கள் மற்றும் சிவபக்தர்கள் சிதம்பரம் நடராஜர் கோயில் வாசலில் சாலையில் அமர்ந்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →