தற்போதைய செய்திகள்

கம்போடியாவிற்கு இந்தியா வெள்ள நிவாரணம்

ANI

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்போடியாவிற்கு இந்தியா சார்பில் வெள்ள நிவாரணம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

கம்போடியாவில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 25 மாகாணங்களில் 19 மாகாணங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில், லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர், மேலும் 30க்கும் அதிகமானோர் பலியாகினர்.

இதையடுத்து, கம்போடியா நாட்டின் மக்களுக்கு இந்தியா சார்பில் 15 டன் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருள்கள் இந்திய கடற்படையின் கில்டன் கப்பலில் அனுப்பப்பட்டது.

வெள்ள நிவாரணம் கொண்டு சென்ற இந்திய கடற்படையின் கில்டன் கப்பல்

கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தை செவ்வாய்க்கிழமை சென்றடைந்த இந்தியக் கப்பல், வெள்ள நிவாரணப் பொருள்களை கம்போடியா தேசிய பேரிடர் மீட்புக் குழுவிடம் ஒப்படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

ஜீ மீடியா தலைமைச் செயல் அலுவலர் திடீர் ராஜிநாமா!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: முதல்-10 இடங்களில் பரமத்தி..!

நக்சலைட்டுகள் பதுக்கியிருந்த வெடிகுண்டுகள் பறிமுதல்

நளதமயந்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரியங்கா....புதிய நாயகி யார்?

SCROLL FOR NEXT