செய்தியாளர்கள் சந்திப்பின் போது நடிகை கெளதமி 
தற்போதைய செய்திகள்

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது பேரதிர்ச்சியாக உள்ளது: நடிகை கௌதமி

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது தமிழக மக்கள் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது என நடிகை கெளதமி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

ராஜபாளையம்: ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது தமிழக மக்கள் மட்டுமல்லாது தேசத்திற்கே பேரதிர்ச்சியாக உள்ளது என நடிகை கெளதமி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பாஜக தேர்தல் பொறுப்பாளரும், நடிகையுமான கௌதமி ராஜபாளையத்தில் நடைபெறும் ரயில்வே மேம்பால பணிகளை பார்வையிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது: 

ரஜினி கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தை கைவிட்டது தமிழக மக்கள் மட்டுமல்லாது  தேசத்திற்கே  பேரதிர்ச்சியாக உள்ளது.

ரஜினி  கடைசி நேரத்தில் அவர் கட்சி அறிவிக்கும்  திட்டத்தை கைவிட்டது அவருடைய சூழ்நிலையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அவர் உடல் நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவை  எடுத்திருக்கும் அவர் நல்லபடியாக இருக்க நான் வேண்டிக்கொள்கிறேன்.

ரஜினியின் இந்த  அரசியல் முடிவால்  பாஜகவுக்கு  எந்த விதத்திலும் பாதிப்பு இருக்காது. எங்களுடைய பணிகள் தொடரும்.

ரஜினியை வைத்து பாஜக தமிழகத்தில் காலூன்றி விடலாம் என்ற திட்டம் கைவிடப்பட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு, கட்சி ஆரம்பிக்காத ஒருவரை வைத்து இதுபோன்று பேசுவது அர்த்தம் இல்லாத பேச்சு.

மக்கள் யார் நல்லது செய்துள்ளார்கள் என்பதை வைத்து தான் ஓட்டு போடுவார்கள். நியாயமான கட்சிக்கு மக்கள் ஒட்டு போடுவார்கள்.

பாஜக தேசிய கட்சி ரஜினியிடம் ஆதரவு கேட்பது குறித்து தேசிய தலைமை தான் முடிவு செய்ய வேண்டும். எங்கள் பணிகளில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. எனக் கூறினார்.  

மேலும், பாஜக தொழில் பிரிவு மாநிலச் செயலாளர் சுகந்தம்.ராமகிருஷ்ணன், மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார் லாரன்ஸ் பிஷ்னோய் தம்பி!

தூத்துக்குடி கடற்கரை சாலையில் கார் மரத்தில் மோதியதில் மருத்துவர்கள் 3 பேர் பலி!

ராமேசுவரம்: காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை குடி போதையில் குத்திக் கொன்ற இளைஞர் கைது!

சேலத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து! 13 பேர் காயம்!

சென்னையில் 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை!

SCROLL FOR NEXT