தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 945 பேருக்கு கரோனா

DIN

தமிழகத்தில் புதிதாக 945 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,17,077 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 275 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 91 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 17 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,109 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,060 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,96,353 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 8,615 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் நிலவரம்:

டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 நண்பகல் வரை ஏறத்தாழ 2,300 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அதில் 1,895 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 20 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. 1,708 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது. 167 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மற்ற பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

மொத்தம் பாதிக்கப்பட்ட 20 பேருடன் தொடர்பிலிருந்த 100 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 20 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT