வண்ண விளக்குகளால் மின்னும் சென்னை நேப்பியர் பாலம்
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை நேப்பியர் பாலத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
புத்தாண்டை வரவேற்கும் விதமாக சென்னை நேப்பியர் பாலத்தை வண்ண விளக்குகளால் அலங்கரித்துள்ளனர்.
கரோனா நோய்த் தொற்றின் பரவல் காரணமாக தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிமுதல் சென்னையில் உள்ள அனைத்து உணவகங்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இருப்பினும், சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தை, அவ்வழியே செல்லும் பொதுமக்களை கவரும் வண்ணம், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சிப்படுத்தியுள்ளனர்.