முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 937 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 937 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 937 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,18,014 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 259 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 89 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 13 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,122 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,038 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,97,391 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 8,501 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பிரிட்டனிலிருந்து திரும்பியவர்கள் நிலவரம்:

டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை 49 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அவர்களில் ஒருவருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

நவம்பர் 25 முதல் டிசம்பர் 21 நண்பகல் வரை ஏறத்தாழ 2,300 பயணிகள் பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தனர். அதில் 1,936 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 24 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது. 1,853 பேருக்கு நோய்த் தொற்று இல்லை என்பது உறுதியானது. 59 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. மற்ற பயணிகளைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

மொத்தம் பாதிக்கப்பட்ட 24 பேருடன் தொடர்பிலிருந்தவர்களை பரிசோதனை செய்ததில் 20 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானது.

பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸ் ஒருவருக்கு இருப்பது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments