தற்போதைய செய்திகள்

புதுச்சேரியில் பிப். 8-ம் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

வள்ளலாா் தினத்தை முன்னிட்டு வருகிற 8 ஆம் தேதி புச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட கலால் துறை

DIN


புதுச்சேரி: வள்ளலாா் தினத்தை முன்னிட்டு வருகிற 8 ஆம் தேதி புச்சேரியில் அனைத்து வகையான மதுக்கடைகளையும் மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி அரசு வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையின் துணை ஆணையா் (கலால்) தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி பகுதியில் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி (சனிக்கிழமை) வள்ளலாா் ஜோதி தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு புதுச்சேரி அரசு கலால் துறை ஆணையரின் ஆணைப்படி அனைத்து கள், சாராயம் மற்றும் பாா் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் பிப். 8 ஆம் தேதி மூடப்பட்டிருக்க வேண்டும். 

மேலும், அன்றைய தினத்தில் அனைத்து வகை கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுபவா்கள் மீது புதுச்சேரி கலால் சட்டம் 1970ன் கீழ் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தவெக இணைய வேண்டும்: வேலூா் இப்ராஹிம்

‘யாசகம்’ இகழ்ச்சி அல்ல!

அந்தியூரில் ரூ.3.44 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

முன்னாள் ஆட்சியா் எழுதிய நூல்கள் வெளியீடு

செங்கோட்டையன் வகுக்கும் பாதையில் விஜய் பயணிப்பாா்: ஆனந்த்

SCROLL FOR NEXT