முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிதி 2 தவணைகளில் வழங்கப்படும்: நிர்மலா சீதாராமன் உறுதி

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  பொதுத்துறை நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத்

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:47 PM
பகிர்:

சென்னை: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை நிதி விரைவில் 2 தவணைகளில் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.

தொழில் மற்றும் வர்த்தகப்பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்ற பின், செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு  பொதுத்துறை நிறுவனங்கள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் சுமார் 60 சதவீதம் கடந்த நவம்பருக்குள் வழங்கப்பட்டுள்ளது. மீதி நிலுவைத் தொகை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்திற்கான ஜிஎஸ்டி நிலுவை நிதி  ரூ.4 ஆயிரம் கோடியை விரைவில் 2 தவணைகளில் வழங்கப்படும் என சீதாராமன் உறுதியளித்தார்.

"மாநிலங்களுக்கான நிதியைக் குறைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. 14-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம், மேலும் 15-வது நிதி ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக மதிக்கிறோம், ”என்று அவர் கூறினார். 

எல்ஐசி பங்கு விற்பனை எத்தனை சதவீதம் என்று இதுவரை முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

இந்திய பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாகவும், நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தைத் தொட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.