தற்போதைய செய்திகள்

சத்தியமங்கலம் அருகே குடற்புழு நோய் தாக்கி ஆண் யானை உயிரிழப்பு

DIN


சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் குடற்புழு நோய் தாக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. 

இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பத்து வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று சாலையோரமாக இறந்து கிடந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து உடனடியாக பவானிசாகர் வனச்சரகர் மனோஜுக்கு வனப் பணியாளர்கள் தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரகர் வனத்துறை மருத்துவருக்கு தகவல் அளித்தார். பின்னர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்தனர். அதில், யானை குடற்புழு நோய் தாக்கி மரணம் அடைந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டது. 

இதனையடுத்து யானையின் உடலில் உள்ள 2 தந்தங்களை வனத்துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டு யானையின் உடலை விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு உணவாக அப்படியே வனப்பகுதியில் விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயணச்சீட்டு முதல் ஐபிஎல் டிக்கெட் வரை.. கூகுள் வேலட் எதற்கு பயன்படும்?

2014-ம் ஆண்டுபோல அதிகபட்ச மழைப்பொழிவு?

12 ரன்களுக்கு ஆட்டமிழந்து டி20யில் மோசமான சாதனை படைத்த மங்கோலியா!

சாம் பித்ரோடா சர்ச்சை கருத்து: பிரியங்கா பதில்

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

SCROLL FOR NEXT