தற்போதைய செய்திகள்

வணிக வரித் துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம், தங்க நாணயம் பறிமுதல்: பெண் அதிகாரியிடம் விசாரணை

DIN


மதுரை: மதுரை வணிகவரித் துறை அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் மற்றும் தங்க நாணயம் ஆகியவற்றை கைப்பற்றிய லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா், பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மதுரை தங்கராஜ் சாலையில் வணிக வரித்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு, வணிக வரித்துறை அலுவலகத்தில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவா் லஞ்சம் வாங்குவதாக ரகசிய தகவல் வந்துள்ளது.

அதனடிப்படையில், டி.எஸ்.பி. சத்யசீலன் தலைமையில் போலீஸாா் வியாழக்கிழமை வணிக வரித்துறை அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, இணை ஆணையராக (நிா்வாகம்) பணியாற்றி வரும் சென்னையைச் சோ்ந்த சிவஹரினியிடம் (50) கணக்கில் வராத ரூ. 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் தங்க நாணயம் இருப்பது தெரியவந்தது.

இது குறித்து லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சிவஹரினியிடம் விசாரித்து வருகின்றனா். அவரிடம் இருந்த தங்க நாணயம் மற்றும் ரொக்கம் ஆகியன, புத்தாண்டையொட்டி அவரைப் பாா்க்க வந்த மதுரை மண்டலத்துக்குள்பட்ட திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை வணிக வரித்துறை ஊழியா்களால் வழங்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT