தற்போதைய செய்திகள்

அந்தியூர் பேரூராட்சி எல்லைக்குள் புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு

DIN

பவானி: அந்தியூர் பேரூராட்சிச் பகுதிகள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தியூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல் நிலையத்தில் கட்சியின் வட்டாரச் செயலாளர் ஆர்.முருகேசன் தலைமையில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட மனு:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பேரூராட்சி எல்லைக்குள் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. புதிதாக  மதுபானக்கடை திறக்கும் இடத்திலிருந்து சுமார் 500 அடிக்குள்தான் அந்தியூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 2,500 மாணவ மாணவியர் படித்து வருகின்றனர்.

இம்மதுக்கடை திறக்கப்பட இருக்கும் முக்கிய சாலையான அந்தியூர் - பர்கூர் சாலையில்தான் ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் வந்து செல்லும் அந்தியூர் அரசு மருத்துவமனை, அந்தியூர் பேரூராட்சி அலுவலகம், வனச்சரக அலுவலகம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகம், வட்டார வள மைய அலுவலகம், தனியார் மருத்துவமனைகள் போன்றவை அடுத்தடுத்து வரிசையாக உள்ளன.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள அந்தியூரில் இருந்து பர்கூர் வழியாக கர்நாடக மாநிலம் செல்லும் சாலையோரத்தில் மதுக்கடை திறக்கப்பட்டால் விபத்துக்களும் அதிகரிக்கும். எனவே பொதுமக்களின் நலன் கருதி மதுக்கடை திறக்க முடிவை நிரந்தரமாக கைவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகிகள் ஏ.எம்.பரமேஸ்வரன், கே.ஏ.குருசாமி, எஸ்.மாரிமுத்து எஸ்.வி.மாரிமுத்து, ஏ.கே.பழனிச்சாமி, எஸ்.செபாஸ்டியன், ஜி.பழனிச்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

SCROLL FOR NEXT