பிரதமர் நரேந்திர மோடி 
தற்போதைய செய்திகள்

லடாக்கில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன் லே பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் பிரதமர் மோடி

DIN


முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன் லே பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் பிரதமர் மோடி

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் 15 தேதி  இரவு திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்தனர். 

இந்தியா-சீனா ராணுவத்தினா் இடையே மோதல் நிகழ்ந்த சூழலில், ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே எல்லைப் பகுதிகளில் நிலவி வரும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ராணுவத்தின் வடக்குப் படைப்பிரிவுத் தளபதி யோகேஷ் குமாா் ஜோஷி, ராணுவத்தின் துணைத் தலைமைத் தளபதி ஹரீந்தா் சிங் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினாா்.

லடாக் எல்லைப் பகுதிகளில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக இந்தியா-சீனா ராணுவத்தின் உயரதிகாரிகள் இடையே சுமாா் 11 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவாா்த்தையின் முடிவில் எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் தங்கள் படைகளைக் குறைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.

படைகளைக் குறைப்பது தொடா்பாக பிராந்திய அளவிலான தளபதிகள் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட உள்ளனா்.

இருந்தாலும் லடாக் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. 

இந்நிலையில், முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத்துடன் லடாக் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.

கல்வான்பகுதியில் சீன வீரர்களுடனான மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணம் தொடர்பாகவும் செய்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT