முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பூரில் கட்டுப்பாட்டு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் மாநகரில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
திருப்பூரில் கட்டுப்பாட்டு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டம்
பகிர்:

திருப்பூர் மாநகரில் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அத்தியாவசியப் பொருள்களை வழங்கக்கோரி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட எஸ்.வி.காலனி பகுதியில் வசிக்கும் 10 க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அப்பகுதி முழுவதும் கரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், அப்பகுதி முழுவதிலும் மரத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கடந்த ஒரு வாரமாக அடைக்கப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று எஸ்.வி.காலனி பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சார்பில் அத்தியாவசியப் பொருள்கள் வழங்குவதாகத் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது வரை வழங்கப்படவில்லை என்று 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், அத்தியாவசியப் பொருள்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →