முகப்பு
தற்போதைய செய்திகள்

இந்தியாவில் தினமும் 7 கோடி தடுப்பூசி 'டோஸ்களை' தயாரிக்க திட்டம்: சீரம் நிறுவனம் அறிவிப்பு

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை, தினமும் 7 கோடி ' 'டோஸ்கள்'' அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

புணே: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை, தினமும் 7 கோடி ' 'டோஸ்கள்'' அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய நிறுவனமான சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று, உலகின் பெரும்பாலான நாடுகளை அசைத்து பாா்த்துள்ளன. இதேபோல, இந்தியாவிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்காகவும், பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளின் அதிகாரிகள், ஊழியர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து, கரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதித்து பார்த்ததில், எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாக கூறப்பட்டது. 

இதையடுத்து, இறுதிகட்ட மருத்துவ பரிசோதனைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் இந்த தடுப்பூசியை இந்தியாவில் உற்பத்தி செய்ய, சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசி, இந்தியாவில் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெற்று, இந்தியாவில் 'கோவிஷீல்டு' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியின் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனை அடுத்த மாதம் தொடங்கும் என்றும், கரோனா தொற்று அதிகம் உள்ள மும்பை, புணே உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா தெரிவித்தார். 

மேலும் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கு தேவையான வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு, விரைவான ஒப்புதல்களை அளித்து உதவி இருக்கிறார்கள்.

நாங்கள் அவசரப்பட விரும்பவில்லை. பொதுமக்களுக்கு ஒரு பயனுள்ள தடுப்பூசியை வழங்குவதில்தான் நாங்கள் எங்கள் கவனத்தை செலுத்துகிறோம்.

தடுப்பூசிகளை தயாரிப்பதில் எங்களுக்கு எந்த சவால்களும் இல்லை. எனவே எங்கள் நிறுவனம் தடுப்பூசியின் சோதனை முடிவுகளை பொருத்து, இந்த ஆண்டு இறுதிக்குள் 30 முதல் 40 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்கவும், தினமும் 6 முதல் 7 கோடி வரையிலான தடுப்பூசி டோஸ்களை தயாரிக்கவும் இலக்கு வைத்துள்ளதாகவும், மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல்களைப் பெற்றதும் தயாரிப்பினை தொடங்க திட்டமிட்டுள்ளதாக ஆதர் பூனவாலா தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →