முகப்பு
தற்போதைய செய்திகள்

மானாமதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனுக்கொடுக்கும் போராட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தினர்

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சனிக்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு அலுவலகமான பாலன் இல்லம் மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக மானாமதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் மனுக் கொடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.

இவர்கள் முகநூலில் பதிவு வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இப்போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மானாமதுரை ஒன்றியச் செயலாளர் ஆறுமுகம், நகர்ச் செயலாளர் நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கமணி, ஒன்றிய துணைச் செயலாளர் கணேசன், கருப்புச்சாமி மாவட்டக்குழ உறுப்பினர் சங்கையா உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →