தற்போதைய செய்திகள்

சீர்காழியில் விவசாய சங்கத்தினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

DIN

சீர்காழியில் விவசாயி சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகள் வைத்து மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சீர்காழியில் விவசாய சங்கம் சார்பில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யாதே, அத்தியாவசிய பொருட்கள் அவசர திருத்தச்சட்டம் 2020, வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச்சட்டம் 2020, விலை உத்தரவாதம் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020, அவசரச் சட்டங்களின் மூலம் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிக்கும் மத்திய அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கையை கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். விவசாய சங்க மாவட்ட தலைவர் பெ.வீரராஜ், ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்  வரதராஜன், கட்சியின் ஒன்றிய துணைச் செயலாளர்  நீதிசோழன், வி.ச.ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன், இளைஞர் பெருமன்றம் ஒன்றிய செயலாளர் மா.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

SCROLL FOR NEXT