முகப்பு
தற்போதைய செய்திகள்

நாமக்கல்லில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வரைவு மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
நாமக்கலில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
பகிர்:

நாமக்கல்: மத்திய அரசின் வரைவு மின்சார திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு மற்றும் இலவச மின்சார உரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  மு.து.செல்வராஜ் தலைமை வகித்தார்.

இதில் மின்சாரத்தை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.  விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்வதற்கு மத்திய, மாநில அரசுகள் சுத்த பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்.

கைத்தறி, விசைத்தறி மற்றும் வீடுகளுக்கு சலுகை கட்டண மின்சாரம் தொடரவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள், ஏஐடியூசி மாவட்ட துணைத்தலைவர் தம்பி ராஜா மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் விவசாயிகள்,  பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →