முகப்பு
தற்போதைய செய்திகள்

வேளாண் அவசர சட்டத்தை எதிர்த்து சென்னையில் வைகோ கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சார்ந்த 4 அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் தனது இல்லத்தின் முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
பகிர்:

மத்திய அரசின் வேளாண் சார்ந்த 4 அவசர சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் தனது இல்லத்தின் முன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருப்புக்கொடி போராட்டத்தில் திங்கட்கிழமை ஈடுபட்டார்.

மத்திய அரசின் அவசர சட்டம் வேளாண்மையை அழித்து விவசாயிகளை விவசாயத்திலிருந்து வெளியேற்ற வழிவகுக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேட்டியளித்த வைகோ, “இலவச மின்சாரத்தை ரத்து செய்தால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். மக்களின் கருத்துக்களை கேட்காமலேயே, அதிகாரப் போக்குடன் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.” என அவர் சாடினார்.

மேலும், மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள சட்டங்களால்,  விவசாயிகள் பாதிக்கப்படுவர். இந்த அவசர சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது தமிழ்நாடு எனக் குறிப்பிட்டார்.

மத்திய சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை குறித்து குறிப்பிட்டுப் பேசிய வைகோ, “எந்த காரணத்தைக் கொண்டும் சுற்றுச்சூழல் ஆய்வை ரத்து செய்யக்கூடாது.” என்று  தெரிவித்தார்.

மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, நல்ல தீர்ப்பு என்றும் மிகச்சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் வைகோ குறிப்பிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →