முகப்பு
தற்போதைய செய்திகள்

விழுப்புரத்தில் பிளஸ் 2 மறுதேர்வு: 11 மையங்களில் 40 பேர் பங்கேற்பு

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் விடுபட்ட மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:00 PM
விழுப்புரத்தில் பிளஸ் 2 மறுதேர்வு
பகிர்:

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் டூ பொதுத் தேர்வில் விடுபட்ட மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 11 மையங்களில் 63 பேர் தேர்வு எழுத இருந்தனர்.

11 மையங்களில் இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதில் 40 மாணவர்கள் கலந்து கொண்டனர். 23 பேர் வருகை தரவில்லை.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் க.முனுசாமி உள்ளிட்ட அதிகாரிகள் மேற்பார்வையிட்டனர்.

கடந்த முறை நடந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு வேதியல், கணக்குப்பதிவியல் பாடங்களில் தேர்வு எழுதாமல் விட்ட மாணவர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →