பறம்புமலை எனப்படும் பிரான்மலையை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி அருகே உள்ள பாரி ஆண்ட பறம்புமலை எனப்படும் பிரான்மலையை பாதுகாத்திட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பொன்னமராவதி அருகே உள்ள பாரி ஆண்ட பறம்புமலை எனப்படும் பிரான்மலையை பாதுகாத்திட வலியுறுத்தி இந்திய தொழிற்சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத்திற்குள்ப்பட்ட பாரி ஆண்ட பறம்புமலை என அழைக்கப்படும் பிரான்மலையில் குவாரி என்ற பெயரில் பாறைகள் நொறுக்கப்பட்டு இயற்கை வளச்சுரண்டல் நடைபெறுவதாகவும் இதை தடுத்து இம்மலையை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட துணைச்செயலர் அ.தீன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய பொறுப்பாளர் கே.குமார், மாதர் சங்க ஒன்றிய செயலர் ஆர்.மதியரசி ஆகியோர் தலைமைவகித்தனர்.
ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டசெயலர் துரைநாராயணன், மாதர் சங்க மாவட்ட செயலர் டி.சலோமி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளர் கே.சண்முகம், பரம்புமலை பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் செ.கர்ணன், சிபிஎம் ஒன்றிய செயலர் என்.பக்ரூதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் பிரான்மலையில் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்துசெய்யவேண்டும். அங்கு செயல்படும் கல்குவாரியை மூடவும் வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.