இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருக்கு கரோனா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அதுல் குமார் அஞ்சன் அவர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
லக்னோ, ஜூலை 30: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் அக்கட்சியின் தேசிய செயலருமான அதுல் குமார் அஞ்சன் அவர்களுக்கு இன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அதுல் தொலைபேசியில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
Advertisement
இப்போது நான் பராபங்கியில் உள்ள மாயோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன் என கூறினார்.