மீஞ்சூரில் முகப்பு பகுதி சேதப்படுத்தப்ட்ட பெரியார் சிலை. 
தற்போதைய செய்திகள்

மீஞ்சூரில் பெரியார் சிலை முகப்பகுதி சேதம்

மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார்  சிலையின் முகப்பகுதியை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளனர்.

DIN

மீஞ்சூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள பெரியார்  சிலையின் முகப்பகுதியை மர்ம நபர்கள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேருந்து நிலைய  நுழைவு வாயில் பகுதியில், இரண்டடி உயரம் கொண்ட பெரியாரின் மார்பளவு வெண்கல சிலை உள்ளது. மர்ம நபர்கள் சிலர், சிலையின் முகப்பகுதியை  சேதப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மீஞ்சூர் காவல்துறையினர் அங்கு சென்று விசாரணை செய்தனர். மேலும்,  சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சேதப்படுத்தப்பட்ட பெரியார் சிலை அருகே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மீஞ்சூரில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

ஆந்திரத்தில் இருந்து மணல் கடத்தல்: 3 போ் கைது

SCROLL FOR NEXT